ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டி பாளையத்தின் அருகே டிஎன்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆவார்.இவரது மனைவி அன்னக்கொடி ஆவார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.
மேலும் தேவராஜுக்கு சரவணன் என்ற ஒரு தம்பியும் உள்ளார்.அவர் அதே பகுதியில் அவருடைய அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் சரவணன் அன்னக்கொடியிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தேவராஜிடம் அன்னக்கொடி கூறியுள்ளார்.பின்னர் தேவராஜ் சரவணனை அழைத்து கண்டித்துள்ளார்.இந்நிலையில் கவுந்தப்பாடி வேலம்பாளையத்தில் உள்ள தன் அம்மா வீட்டுக்கு அன்னக்கொடி மகனுடன் சென்று தங்கியுள்ளார்.
அங்கிருந்து கொண்டே ஒரு பள்ளியில் மகனை விடுவதும் பின்னர் மாலை அளித்து வருவதுமாக இருந்துள்ளார்.இந்த விஷயம் சரவணனுக்கு தெரியவந்துள்ளது.அப்பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு அண்ணிக்காக காத்திருந்துள்ளார்.
பின்னர் பள்ளியில் இருந்து மகனை அழைத்து வரும் அன்னக்கொடியை பார்த்ததும் கையில் வைத்திருந்த கத்தியால் அன்னக்கொடியை வயிறு, மார்பு என பல இடங்களில் சரமாரி குத்தியுள்ளார்.
இதனால் அன்னக்கொடியை ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.பின்னர் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த கத்தியால் தன்னை தானே குத்தி கொண்டுள்ளார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறன.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…