சென்னை : குற்றாலம் பழைய அருவியில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
தென்காசி பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நெல்லையைச் சேர்ந்த சிறுவன் (17) அஸ்வின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு இருக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக தென்காசி பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் எல்லாம் அலறி அடித்து ஓடினார்கள். திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளபெருகில் நெல்லையைச் சேர்ந்த சிறுவன் (17) அஸ்வின் என்பவர் அடித்து செல்லப்பட்டார். தனது குடும்பத்தினருடன் குளித்து கொண்டு இருந்த நிலையில், அவர் அடித்து செல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வனப்பகுதியினர் குறிப்பிட்ட இடம் ஒன்றை பார்வையிட்ட போது சிறுவனின் உடல் இருந்தது தெரிய வந்தது.
அருவியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…