சென்னை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் நர்மதா. இவர் கம்மார்பாளயத்தை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சவுந்தர், தனியார் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் டெலிவர் செய்யும் வேலை செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியாது. ஆனால் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நர்மதா கர்பமடைந்தார்.
8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், நேற்று மாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. பிரசவ வழியாக இருக்குமோ என அஞ்சிய அவர், தனது காதலான சவுந்தருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து, யாருக்கும் தெரியாமல் சவுந்தர் நர்மதாவை கம்மார்பாளையம் அருகே உள்ள காப்புக்காட்டிற்கு அழைத்து சென்று தானே பிரசவம் பார்ப்பதாக கூறினார்.
அதன்பின், இருவரும் காப்புக்காட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நர்மதாவை படுக்கவைத்து யூ-டியுபில் பிரசவ விடீயோக்களை பார்த்து அதுப்படியே பிரசவம் பார்த்து வந்தார். அப்பொழுது கையால் குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தார்.
அப்பொழுது குழந்தையின் கை துண்டாக வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையின் கையை காட்டிலேயே வீசினார். குழந்தையை எப்படியாவது வெளியே எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தன்னிடம் இருந்த பிளேடால் தோப்பில் கொடியை அறுத்தார். அப்பொழுது நர்மதாவின் குடலில் அந்த பிளேடு தெரியாமல் அறுத்தது. அப்பொழுது ரத்தம் அதிகமாக வெளியேறியதை பார்த்து அவள் கதறினாள்.
நிலைமை பெரிதானால், சுந்தரின் மோட்டார் சைக்கிளில் நர்மதாவை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், நர்மதா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினார். இதனையடுத்து, நர்மதாவை எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அறுவைசிகிச்சை மூலம் இறந்த நிலையில் அந்த ஆண் குழந்தை எடுக்கப்பட்டு, நர்மதாவுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக குமிடிப்பூண்டி காவலர்கள், சுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…