“ஒரு ஸ்வீட் பாக்ஸ் பாக்கி இருக்கு…” நெகிழ வைக்கும் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி ‘அண்ணன் – தம்பி’ பாசம்.!
அண்ணா நாம் எப்போது சைக்கிள் பயணம் போகலாம் என்ற ராகுலின் கேள்விக்கு, நீங்கள் எப்போது சென்னைக்கு வந்தாலும் நாம் சைக்கிளில் சுற்றலாம் என மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஓய்வு நேரங்களில் முதல்வர், ஓட்டுனரில்லாத காரில் பயணிப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
சிகாகோ பயணத்தின் போது, அங்குள்ள சாலையில் மகிழ்ச்சியாக தனியே சைக்கிள் பயணம் செய்யும் வீடீயோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, “அண்ணா , நாம் எப்போது சென்னையில் ஒன்றாக சைக்கிள் பயணம் மேற்கொள்வது.?” என கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என் அன்பு தம்பி ராகுல் காந்தி, நீங்கள் எப்போது வேண்டுமானலும் சென்னை வரலாம். அப்போது நாம் சைக்கிள் பயணம் செய்து சென்னையை சுற்றிப்பார்க்கலாம். எனது பக்கம் இருந்து, ஒரு ஸ்வீட் பாக்ஸ் பாக்கி இருக்கு. நாம் சைக்கிள் பயணம் முடித்தப் பிறகு நமது வீட்டில் தென்னிந்திய உணவுகளை ஒன்றாக சாப்பிடலாம். ” என பதிவிட்டுள்ளார்.
Dear brother @RahulGandhi, whenever you’re free, let’s ride and explore the heart of Chennai together! ????
A box of sweets is still pending from my side. After our cycling, let’s enjoy a delicious South Indian lunch with sweets at my home. https://t.co/X0Ihre6xpo
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் I.N.D.I.A கூட்டணி பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருந்த ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு செல்வதற்கு முன்னர், இரவில் தனது காரை இடை நிறுத்தி, சாலை தடுப்புகளில் ஏறி குதித்து சாலையை கடந்து ஒரு ஸ்வீட் கடைக்கு சென்றார்.
அங்கு “என் அண்ணன், ஸ்டாலின் வீட்டிற்கு செல்கிறேன். அதற்காக ஸ்வீட் பாக்ஸ் வாங்குகிறேன்” என கூறி ஸ்வீட் பாக்ஸ் வாங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார். ராகுல் காந்தி ஸ்வீட் பாக்ஸ் வாங்கும் வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தான் முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரு ஸ்வீட் பாக்ஸ் பாக்கி இருக்கு” என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025