சென்னை அருகே பயங்கரம்! நாட்டு வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை.!
சென்னை அருகே ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக நிர்வாகியுமான சங்கர் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே, வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த பிபிஜி.சங்கர் எனும் நபரை நேற்று இரவு மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
பிபிஜி.சங்கர் நேற்று இரவு சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, பூந்தமல்லி அடுத்த நாசரேத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருக்கும் போது, மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசியுள்ளது.
இதனால் உடனடியாக காரில் இருந்து இறங்கி தப்பி ஓடுவதற்கு முயன்ற பிபிஜி சங்கரை அந்த மர்ம கும்பல் விடாமல் துரத்தி நாடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நாசரேத்பேட்டை போலீசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.