பெரிய திரையில் சாம்பியன்ஸ் டிராபி மேட்ச் பார்க்க ரெடியா? மெரினா, பெசன்ட் நகரில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்!
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியை மக்கள் காணும் வகையில் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் விளையாடிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா தவிர்த்து வேறு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தால், இறுதி போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று இருக்கும்.
தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் விளையாட உள்ளன. உள்ளூர் நேரப்பபடி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது.
வழக்கமாக இவ்வாறான முக்கிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது சென்னை கடற்கரை பகுதிகளில் மக்கள் இலவசமாக பெரிய திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்ப்பட்டிருக்கும். அதேபோல இந்த முறையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துரைஸ் சார்பாக பெரிய திரை ஏற்பாடு சென்னை மெரினா மற்றும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பெரிய திரையில் போட்டிகளை காண இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் இடம்பிடித்து கொண்டு குவிய தொடங்கியுள்ளனர். இதற்கு முன்னதாக இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய அரையிறுதி போட்டியும் இதே போல பெரிய திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.