சென்னை புழல் சிறையில் வங்கதேச கைதி உயிரிழப்பு..!
சென்னை புழல் சிறையில் வங்கதேச கைதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு.
வங்கதேசத்தை சேர்ந்த ஆலம் ஷேக் (45) என்பவர் கடந்த மாதம் சட்ட விரோத பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனை எடுத்து சென்னை புழல் ரயிலில் சிறையில் இவர் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.