7 வயது சிறுவனுக்கு 526 பற்கள் இருந்துள்ளது …என்ன நம்ப முடியலயா !

சென்னையை சேர்த்த 7 வயது சிறுவன் ஒருவருக்கு 526 பற்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் பிரபுதாஸ். இவரது 7 வயது மகன் ரவீந்திரநாத்.
ரவீந்திரநாத்துக்கு சிறு வயது முதலே வலது கன்னம் சற்று வீக்கமாக இருந்து வந்துள்ளது. 3 வயது இருக்கும் போது சென்னை அரசு மருத்துவமனையில் காட்டியுள்ளார். அப்போது வலி நிவாரிணி மாத்திரை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், 7 வயதாகும் போது வலி அதிகமாக இருந்ததால் சென்னை சவிதா பல் மருத்துவமனையில் சிகிச்சைபெற வந்துள்ளனர். அங்கு நடந்த பரிசோதனையில், சிறுவனின் வாயில் குவியல் குவியலாக பற்கள் இருந்தது கண்டுபிடிக்க பட்டுள்ளது. இதையடுத்து 5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் வாயில் இருந்த 526 சிறு பற்கள் அகற்றப்பட்டுள்ளது.
தற்போது அந்த சிறுவனுக்கு 32 பற்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025