ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு! குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம்!

சென்னை ஆவடி அருகே உள்ளே திருநின்றவூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிற நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.
அப்போது, அவரது வீட்டிற்குள் 6 அடி நீளத்தில் உள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த பாம்பு அங்கும் இங்கும் சுற்றி திரிந்த நிலையில், இறுதியாக குளிர்சாதன பெட்டிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து என்ன செய்வதென்றே தெரியாது தவித்த மணிகண்டன் இறுதியில், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், இந்த பாம்பை சாதூர்யமாக பிடித்து, அந்த பாம்பை பாக்கெட்டிற்குள் அடைத்து வெளியே கொண்டு சென்றனர். வீட்டிற்குள் திடீரென நுழைந்த இந்த பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025