தாயை பிரிந்த நிலையில் முதுமலைக்கு அனுப்பப்பட்ட 4 மாத குட்டியானை உயிரிழப்பு..!
தாயை பிரிந்த நிலையில் இருந்த நான்கு மாத குட்டியானை உயிரிழப்பு.
தர்மபுரியில் தாயை பிரிந்த நிலையில் இருந்த நான்கு மாத குட்டியானையை முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஒஸ்கார் விருது வென்ற தி எலிபன்ட் விஸ்பரஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் – பெல்லி தம்பதியினரிடம் வளர்க்க ஒப்படைத்தனர். அதன்படி குட்டியானையை அந்த தம்பதியினர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், குட்டியானைக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு இந்த குட்டியானை உயிரிழந்துள்ளது.