கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. இன்னும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை உலுக்கிய இந்த விஷச்சாராய சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, விஷச்சாராயம் தயாரிப்பு, விற்பனை, அதன் பாதிப்புகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நேற்று நியமித்து இருந்தது. இந்த ஒருநபர் ஆணையம் நேற்று முதல் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ள விசாரணை அதிகாரி கோகுல்தாஸ் இன்று செய்தியாளர்களிடம் முக்கிய தகவலை குறிப்பிட்டார். அவர் பேசுகையில், தற்போது விசாரணை நிலை குறித்து எந்த விவரமும் கூற முடியாது என கூறினார். இறுதியாக விசாரணை முடிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசு முறையாக அறிவிக்கும் என கூறினார்.
அப்போது விசாரணை ஆணைய அறிக்கை சமர்ப்பிக்க காலஅவகாசம் வழங்ப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என விசாரணை ஆணைய தலைவர் கோகுல்தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…
சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்=…
உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…
சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக…
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி,…
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…