சென்னை ஐஐடியில் ஒரு மாணவன் தற்கொலை.. இன்னோரு மாணவன் தற்கொலை முயற்சி.? போலீஸ் தீவிர விசாரணை.!
சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி 2ஆம் ஆண்டு படித்து வந்த ஸ்ரீவன் சன்னி எனும் மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவர் ஸ்ரீவன் சன்னி எனும் மாணவர் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், ஐஐடியில் விடுதியில் தங்கி படித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் தற்கொலை குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து கோட்டூர் புறம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீவன் சன்னி, ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் என்பது கூடுதல் தகவல்.
மேலும், இன்னோரு மாணவன் அதிக மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் சரியான பிறகு தான் ஸ்ரீவன் சன்னி தற்கொலை குறித்தும், இவரது தற்கொலை முயற்சி குறித்தும் விரிவான தகவல் கிடைக்கும் என தெரிகிறது.