கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு!
கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளினுள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொல்லியல் துறை சார்பில் கீழடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு பழங்காலத்து பொருட்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை கொந்தகை தளத்தில் நான்கு குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மண்டையோடு, கை, கால், எலும்புகள் உணவுக்குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவை மரவனும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளினுள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய முதன்முறையாக அமெரிக்க பல்கலைக்கழக நிபுணர்கள் களமிறங்கி உள்ளனர்.