பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை.! 21 வயது இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை.!
திண்டுக்கல்லில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 21 வயது இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பாரதி கணேஷ் எனும் 21வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டின் அருகே உள்ளே சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்த சமபவம் நடந்துள்ளது. அப்போதே அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதனை கூறியுள்ளார். உடனே மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் பாரதி கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று, அவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 21 வயது இளைஞரான பாரதி கணேஷுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது .