#Breaking:வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை உயிரிழப்பு!
சென்னை:வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது.
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது.கொரோனா பரிசோதனை செய்வதற்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுத்தை உயிரிழந்துள்ளது.
ஆனைமலையில் இருந்து கொண்டு வரபட்டு 13 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில்,தற்போது சிறுத்தை இறந்துள்ளது.
ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அதை தேதி குறிப்பிடாமல் மூடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. மேலும்,கடந்த வாரம் ஆண் சிங்கம் விஷ்ணு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள நிலையில்,தற்போது சிறுத்தை உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.