சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம்.
இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்னுமே கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் 19,20 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில், தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (17) அடித்துச் செல்லப்பட்டார். தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுவனைத் தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் தனது குடும்பத்தாருடன் குளித்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அவர் அடித்து செல்லப்பட்டார். பல சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் குளித்து கொண்டு இருந்த நிலையில், திடீரென வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்கள் பலரும் அலறி அடித்து ஓடினார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…