ஆளுநர் ரவிக்கு எதிராக, குடியரசுத்தலைவரிடம் 15 பக்க புகார் கடிதம்; முதல்வர் ஸ்டாலின்.!
தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, குடியரசுத்தலைவரிடம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் ரவி குறித்து புகார் கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக, ஆளுநர் ரவி செயல்பட்டது, தமிழக அரசுடன் இருந்து வரும் சுமூகமில்லாத போக்கு, தொடர்ந்து சர்ச்சையாக அரசியல் பேசி வருவது என 15 பக்கங்களில் ஆளுநர் ரவி, குறித்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில், இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அந்த புகார் கடிதத்தில் ஆளுநர் ரவியை மாற்றக் கோரியும் முதல்வர் ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.