திருச்சியில் உள்ள தாராநல்லூரில் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சிராஜூதீன் ஆவார். இவரது மகள் மகபுநிஷா.சுமார் 13 வயதாகிய இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மேலும் சில நாடுகளுக்கு முன்பு மகபுநிஷாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் சென்றுள்ளது.அப்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அங்கு நடந்த சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சில மருந்துகளை சாப்பிடுவதற்காக மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரைசெய்துள்ளனர்.பின்னர் அந்த மருந்துகளை சிறுமி தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும் கடந்த 24-ம் தேதி அன்று வீட்டில் வழக்கம் போல் மருந்து எந்த இடத்தில் இருக்குமோ அந்த இடத்தில் இருந்து மருந்துகளை எடுத்து சாப்பிட்டுள்ளார்.பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பதறிப்போன சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் எலி மருந்து மாத்திரையை சாப்பிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
அப்போது தான் பெற்றோருக்கு வயிற்றுவலி மாத்திரைக்கு பதிலாக எலிமருந்து மாத்திரையை சிறுமி தவராக எடுத்து சாப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.பின்னர் தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…