சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 13 வயது சிறுவன் பலி.!

Sivakangai Manjuvirattu

தை 1 தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த திங்கள் முதல், பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் எனும் மாட்டு வண்டி பந்தயம் என பல்வேறு காளைகளை உள்ளடக்கிய வீர விளையாட்டுகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இன்று உலக புகழ்பெற்ற  அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள்…தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு..!

சிவகங்கை மாவட்டம் சிறாவயல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போன்ற மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 271 காளைகள் பங்கேற்கின்றன. 81 மாடுபிடி வீரர்கள் இந்த விளையாட்டில் பங்கேற்றுள்ளனர். சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போட்டியின் போது, அங்கு பார்வையாளராக வந்திருந்த வலையப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாஸ்கரை மஞ்சுவிரட்டு காளை ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். மஞ்சுவிரட்டு காளை அவிழ்த்துவிடப்பட்டு அது குறிப்பிட்ட தூரத்தை கடந்து, மாட்டின் உரிமையாளர்கள் அதனை பிடிக்க முற்படும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்