சென்னை அருகே காய்ச்சல் பாதிப்பால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு.! 

DEAD

தற்போது மழை காலம் என்பதால் அரசு சார்பில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் 10 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் ஜேஜே நகரை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் சக்தி சரவணனுக்கு கடந்த 8ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சக்தி சரவணனை அவனது பெற்றோர் தஅழைத்து சென்று தொடர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருந்தும் காய்ச்சல் குணமாகாத காரணத்தால், அடுத்து, சென்னை எழும்பூர் குழந்தை நல அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவன் சக்தி சரவணன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சக்தி சரவணனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. டெங்கு அறிகுறிகள் காணப்பட்டாலும், சிறுவனுக்கு டெங்கு உறுதி செய்யப்படவில்லை என மருத்துவர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி சரவணன் உயிரிழந்தான். சிறுவன் உயிரிழப்பை அடுத்து, சென்னீர்குப்பம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர காய்ச்சல் கண்காணிப்பு , தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்