9,10,11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்துள்ளனர்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று 2020-21 ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி ஆல்-பாஸ் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார்.
கல்வி தொலைக்காட்சி, இணையம் மூலம் பாடம் கற்ற மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகளை தமிழக அரசால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்வின்றி ஆல்-பாஸ் என முதல்வர் அறிவித்த நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜூன் அல்லது ஜூலையில் பள்ளிகள் திறக்கப்பட பிறகு மாணவர்கள் வந்தால் போதும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று குறைந்த நிலையில், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் 9,10,11ம் வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…