BREAKING:குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம் – டிஎன்பிஎஸ்சி அதிரடி.!
- குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
- முறைகேடு விவகாரத்தில் 99 தேர்வர்களுக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்துள்ளது டிஎன்பிஎஸ்சி.
இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.ராமேஸ்வரம் ,கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு செய்ததை உறுதி செய்தது டிஎன்பிஎஸ்சி.மேலும் 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது.சம்மந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராமேஸ்வரம் , கீழக்கரை தேர்வு மையங்களில் தவிர வேறு எந்த இடங்களிலும் தவறு நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.