நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில்,தமிழகத்தில் பெரும்பாலும் 99% பேருக்கு BA2 வகை வைரஸ் தான் பரவுகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
“வண்டலூர் அருகே உள்ள விஐடி கல்லூரியில் 163 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,மாணவர்களை வீடுகளில் தங்கியிருக்க செய்வது,கல்வி நிறுவனத்திற்கு விடுமுறை வழங்குவது போன்ற நிலைகளை ஏற்படுத்த வேண்டாம்.ஏனெனில்,இந்த தொற்றை நாம் கட்டுப்படுத்தி விடலாம்.
எனினும்,கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.அதன்படி,நான்கு பேர் அமரக்கூடிய மேசை என்றால் இரண்டு பெரும்,6 பேர் அமரக்கூடிய மேசை என்றால் 3 பேரும்,எட்டு பேர் அமரக்கூடிய மேசை என்றால் நான்கு பேரும் உட்கார்ந்து உணவருந்த உத்தரவிட்டுள்ளோம்.நிச்சயம் விஐடி கல்லூரியில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்.
மேலும்,மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்றோ,நாளையோ வந்துவிடும்.அதைப்போல அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில்,BA2 வகை கொரோனா தொற்றுதான் கண்டறியப்பட்டுள்ளது.மேலும்,சத்திய சாய்,சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் BA2 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே,அண்ணா பல்கலைக்கழகம்,சத்திய சாய்,சென்னை ஐஐடியில் எடுக்கப்பட்ட பரிசோதனைகள் படி 99% பேருக்கு BA2 வைரஸ் தான் உள்ளது.ஒருவருக்கு மட்டும் BA3 வகை தொற்று பரவியுள்ளது. இதனிடையே,நாவலூரில் ஒருவருக்கு BA4 வகை கொரோனா இருந்த நிலையில்,அவரும் குணமாகிவிட்டார்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,பேசிய அமைச்சர்,”ஒமிக்ரான் வகை தொற்றைப் பொறுத்த வரையில் 7 வகை உள்ளது.அதன்படி,BA1,BA2,BA3,BA4,XE உள்ளிட்ட ஏழு வகையிலான தொற்று உள்ளது.அந்த வகையில்,தற்போது பெரும்பாலும் 99% பேருக்கு BA2 வைரஸ் தான் உள்ளது.இது A வகை தான்.எனினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை”என்று கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…