சென்னையில் 98% நபர்களுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னையில் 98% நபர்களுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1210 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில், நேற்று மட்டும் 94 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் 98% நபர்களுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா தொற்று இரு மடங்காகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.