மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% ஏற்கனவே முடிந்துவிட்டது என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் பதில்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய அப்போது கூறப்பட்டது.
ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நடைபெறவில்லை. இதுவரை 10 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனிடையே, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதலில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதனை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்துவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் கடந்த 2019 ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யகோரிய மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, விசாரணை 90% ஏற்கனவே முடிந்துவிட்டது என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு ஆகஸ்ட் 25ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…