எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தமிழக சிறைக்கைதிகள் 98.52% சதவீதம் பேர் தேர்ச்சி.!
தமிழ்நாடு சிறைச்சாலைகளில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதிய 203 சிறைக்கைதிகளில் 200 பேர் தேர்ச்சி.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்தாண்டு10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்ததாக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.
இதுதவிர தமிழக சிறைச்சாலைகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 203 சிறைக்கைதிகளில் 200 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர், கிட்டத்தட்ட 98.52% சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
2022-23ம் கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மத்திய சிறைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைகளில் இருந்து 9 பெண் கைதிகள் உட்பட 203 சிறை கைதிகள் 10ம் வகுப்பு தேர்வெழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.