பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் 95% நிறைவு.! அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்.!
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளது. அதாவது பணிகள் இதுவரை 95 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும். அடையாறில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெறும் பணிகள் கிண்டியில் அயோத்திதாசர் மணிமண்டபப் பணிகள் ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் குறிப்பிடுகையில், ‘ ரூ 2.48 கோடி மதிப்பீட்டில் அயோத்திதாசர் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அம்பேத்கர் மணிமண்டபம் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது சீரமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை வரும் 27 ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.’ என அமைச்சர் தெரிவித்தார்.
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளது. அதாவது பணிகள் இதுவரை 95 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சென்னையில் இரவு நேரம் மட்டுமே பணிகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இரவு 11 மணிக்கு தொடங்கி காலை 5 மணிக்குள்ளாக அதனை முடிக்க வேண்டியுள்ளது. இதனால் இதுவரையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் 95% முடிவடைந்துள்ளன. என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.