509 பொறியியல் கல்லூரிகளில் 94 ஆயிரத்து 867 இடங்கள் காலி…!அமைச்சர் கே.பி.அன்பழகன்
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரி தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், 509 பொறியியல் கல்லூரிகளில் 94 ஆயிரத்து 867 இடங்கள் காலியாக இருக்கின்றது. அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரி தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.