கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நேற்று வரை 93.68 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்..!

Default Image

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 07.09.2020 முதல் 31.03.2021 வரை 93.68 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2021 மார்ச் மாதத்தில் 28.17 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.  சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கியது.

இதைத்தொடர்ந்து, 07.09.2020 முதல் 31.03 .2021 வரை மொத்தம் 93,68,304 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 07.09. 2020 முதல் 31. 12.2020 வரை மொத்தம் 31,52,446 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.01.2021 முதல் 31.01.2021 வரை மொத்தம் 13,43,695 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.02.2021 முதல் 28.02.2021 வரை மொத்தம் 20,54,653 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.03.2021 முதல் 31.03.2021 வரை மொத்தம் 28,17,510 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 08.03 2021 அன்று 1,01,163 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி செப்டம்பர், 2020 முதல் மார்ச் 2021 வரை மொத்தம் 2,12,941 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 47,81,943 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

2021 மார்ச் மாதத்தில் மட்டும் க்யு ஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 62,586 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும் பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 13,17,093 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code பயணச்சீட்டில் ஒருவழிப்பயண அட்டை, இருவழிப்பயண அட்டை பலவழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் 11.09.2020 முதல் 20% கட்டணத் தள்ளுபடி அளித்து வருகிறது. மெட்ரோ இரயில் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22.02.2021 முதல் 20% கட்டணக் கள்ளுபடி வமங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்