என்ன கொடுமடா…கழிவறையில் தாயயை தங்க வைத்து கொடுமை படுத்திய கொடூர மகன்.பதறவைக்கும் சம்பவம்
- 92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய கொடுமை
- வளர்ப்பு மகன்- மருமகள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்ஸ் நகரைச்சேர்ந்தவர் நிகோலஸ்.வருடைய பராமரிப்பில் 92 வயது மூதாட்டி மரிய மிக்கேல் இருந்து வருகிறார்.இவர் தாயின் சகோதரி ஆக ஆவார்.அவரை சரியாக பராமரிக்காதது மட்டுமல்லாமல் இரக்கமில்லாமல் அவரை கழிவறையில் தங்க வைத்து உள்ளனர்.அந்த கழிவறையானது பாலடைந்தும் வெயிலில் மழை எல்லாம் உள்ளே நுழையும் அளவிற்கு கழிவறை வசதி உள்ளது.தமிழகத்தில் இம்மாதம் அதிக குளிர் நிலவி வருகிறது.92 வயது நிரம்பிய அம்மூதாட்டி இரவில் குளிரில் நடுங்கியவாறு அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த தகவலையை அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையின் நடவடிக்கையால் அம்மூதாட்டி மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் தற்போது சேர்க்கப்பட்டார்.இது தொடர்பாக சமூக நலத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் மூதாட்டியை சரியாக பராமரிக்காத புகாரில் நிகோலஸ் மற்றும் அவருடைய மனைவியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.