பட்டம் பெறுவதற்கு வயதெல்லாம் ஒரு விஷயமே இல்லை! 91 வயதில் முனைவர் ஆன ஆடிட்டர் மிஷ்கின்!
படிப்புக்கு வயது இல்லை என கூறுவர். அதற்க்கு ஓர் உதாரணமாக தனது 91 வயதில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூரை சேர்ந்த மிஷ்கின்.
இவர் 1950 ஆம் ஆண்டே சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர், 1958ஆம் ஆண்டு தனது சி.ஏ படிப்பை முடித்து, ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் செக் பௌன்ஸ் ( காசோலை திரும்ப வருதல் ) பற்றியும் அதில் நடக்கும் மோசடி பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து வந்தார். இது தொடர்பாக 400 வழக்குகளை ஆராய்ந்து இந்த ஆய்வை தனது 91 வயதில் வெற்றிகரமாக முடித்துள்ளர். இந்த முனைவர் பட்டத்தை திருச்சி பாரதிதாசன் யூனிவெர்சிட்டியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பெற்றுக்கொண்டார்.