கோவையில் 90,000 பேர் வாக்களிக்காததால் தோல்வியை சந்தித்தேன்- கமல்ஹாசன்..!

Kamal Haasan

மக்கள் நீதி மய்யம் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது ” இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 95 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என கூறுகிறது. தேர்தலில் 95 லட்சம்  மட்டும் செலவு செய்தால் என்ன ஆகும், கோவை தெற்கு தான் ஆகும்.

நான் கோவையில் தோல்வியடைந்தது 1,728 ஓட்டுகள் அல்ல எனது தோல்வியாக நான் கருதுவது எதை என்பதை சொல்கிறேன். அதுதான் நமது தோல்வியும், கோவையில் 90,000 பேர் வாக்களிக்கவில்லை, சொல்லப்போனால் நாட்டில் 40 சதவீதம் மக்கள் வாக்களிப்பதே இல்லை.  அவர்கள் அனைவரும் வாக்களித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

என்னை முழு நேர அரசியல்வாதியா ..? என்று  என்னை  கேள்வி கேட்கிறீர்கள்..? நீங்கள் 40 சதவீதம் வாக்களிக்காமல் முழு நேர குடிமகன்களாக கூட இல்லை, 95 லட்சம் மட்டும் செலவு செய்யக்கூடிய வேட்பாளர் ஒரு நேர்மையான வேட்பாளர் ஜெயிக்கவே முடியாது என தெரிவித்தார். என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது.  அதில் எந்த மாற்றமும் இல்லை தொடர்ந்து அழுத்தமாக நடைபெற்றுக் கொண்டே இருப்பேன் இந்த அரசியல் வேறு, அரசியல் செலவுகள் அனைத்துமே என் சொந்த சம்பாத்தியம் என தெரிவித்தார்.

முழுநேர அரசியல்வாதி யார் என சொல்லுங்கள்.. நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன் என சொல்கிறேன் – கமல்

விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்ததில் 10% கூட மத்திய அரசு செய்யவில்லை, நாட்டை படையெடுத்து எதிரி படைகள் போல டெல்லியில் விவசாயிகள் வரவேற்கப்படுகிறார்கள். விவசாயிகள் நடக்கும் பாதையில் ஆணிப்படுக்கைகள்  போட்டுள்ளார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் விவசாயிகளை மதிக்கிறோம். இந்த வித்தியாசம் தெள்ளத் தெளிவாக அண்ணா காலத்திலிருந்து இருந்து கொண்டு இருக்கிறது.

தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என நினைக்கும் மய்யம் அங்கு உள்ளது. நாம் செய்த நன்மைக்காக, நாம் செய்த தேசத் தொண்டுக்காக  இன்று தண்டிக்கப்படுகிறோம். வருமானம் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறது என்பதை மத்திய அரசு  கணக்கெடுக்க வேண்டும். முதல் மூன்று மாநிலங்களில் தமிழகம் இருக்கும். நம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 25 பைசா மட்டுமே வருகிறது.

ஆனால் அதிக தொகுதிகளை வைத்துள்ள மத்திய பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம் அவர்களுக்கு 4 ரூபாய் கிடைக்கிறது” என தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்