தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
யூரியா தட்டுப்பாடு உள்ளதாக புகார் தெரிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து யூரியா உரத்தை ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்திற்கு விரைவில் வரவுள்ளது.
காரைக்காலில் இருப்பில் உள்ள 4,000 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். அக்டோபர் இறுதிக்குள் ஸ்பிக் 10,000 மெட்ரிக் டன், எம்எப்எல் நிறுவனம் 8,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்க திட்டம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்சமயம் நிலவி வரும் சாதகமான பருவமழை காரணமாக 13.747 இலட்சம் எக்டரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 7.816 இலட்சம் எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா ( இராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள். எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, அக்டோபர் மாதத்திற்கு யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1.43,500 மெ.டன், 4480 மெ.டன் மற்றும் 8140 மெ. டன் ஒதுக்கீடு செய்தது. யூரியா 1,43,500 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெ.டன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெ.டன் இறங்குமதி யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…