சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார்.
சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து, பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியரான ராஜகோபாலன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், நாகராஜனை ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது.
பாலியல் தொந்தரவு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வரும் 8-ம் தேதி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜராக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், மஹரிஷி வித்யாமந்திர், செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான பாலியல் புகார்களும் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…