தமிழகத்தில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலி.!

Published by
கெளதம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் கல்பாக்கத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதில், புதுச்சேரி சென்று திரும்பிய நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் 5 பேரும், சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கார் இரும்பு ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

அதாவது,  கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த 4 நண்பர்கள் பலியாகினர். இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரிக்கு சென்று திரும்பிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல, மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது மனைவியும் மகன்களும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

4 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

4 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago