தமிழகத்தில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலி.!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் கல்பாக்கத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதில், புதுச்சேரி சென்று திரும்பிய நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் 5 பேரும், சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கார் இரும்பு ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
அதாவது, கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த 4 நண்பர்கள் பலியாகினர். இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரிக்கு சென்று திரும்பிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதேபோல, மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது மனைவியும் மகன்களும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025