கள்ளச்சாராயத்தால் 9 பேர் உயிரிழப்பு – மேலும் மூன்று பேர் கைது!

Arrest

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்ற ரவி, சங்கர், முத்து உள்ளிட்ட 4 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மேலும் 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் வியாபாரிகள் ஆறுமுகம், முத்து, ரவி ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அமரன் எனும் கள்ளச்சாராயம் வியாபாரி கைதான நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைதாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய டிஜிபி உத்தரவிட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 203 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 5901 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தலைவர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்