9 ஐஏஎஸ் அதிகாரிகள், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! முழு விவரம் இதோ….

Published by
மணிகண்டன்

இன்று தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா.ஐஏஎஸ் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவின்படி பணியிட மாற்றப்பட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு…

  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ்.ஐஏஎஸ், தற்போது சிப்காட் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ்.ஐஏஎஸ், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர்.ஐஏஎஸ், தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • செங்கல்பட்டு துணை ஆட்சியராக இருந்த லட்சுமிபதி.ஐஏஎஸ், தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • நகர்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குனர் தங்கவேல்.ஐஏஎஸ், தற்போது கரூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சிப்காட் இயக்குனராக இருந்த சுந்தரவல்லி.ஐஏஎஸ், தற்போது வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனராக பணியில் இருந்த வீரராகவ ராவ்.ஐஏஎஸ், தொழில்நுட்பக் கல்வி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருப்பூர் மாவட்ட துணைஆட்சியராக பணியில் இருந்த ஸ்ருட்டன்ஜோ நாராயணன்,ஐஏஎஸ், தற்போது விழுப்புரம் மாவட்ட கிராமப்புற திட்ட நிறுவன தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ரத்னசாமி.ஐஏஎஸ், தற்போது ராமநாதபுரம் மாவட்ட கிராம புற திட்ட அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் போல, தமிழக உள்துறை செயலாளர் அமுதா.ஐஏஎஸ் பிறப்பித்த உத்தரவில் இன்று 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் பின்வருமாறு…

  • சென்னை சிவில் சிஐடி காவல் பிரிவு டிஐஜியாக பொறுப்பில் இருந்த கே.வன்னிய பெருமாள்.ஐபிஎஸ், தற்போது ஊர்காவலத்துறை டிஜிபியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • காவல்துறை பயிற்சி கல்லூரி ஐஜியாக இருந்த ஆர்.தமிழ் சந்திரன்.ஐபிஎஸ், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐஜிபியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஐஜிபியாக இருந்த பி.கே.செந்தில்குமாரி.ஐபிஎஸ், சென்னை சென்ட்ரல் கிரைம் பிரிவு ஏசிபியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை சென்ட்ரல் க்ரைம் பிரிவு ஏசிபியாக பொறுப்பில் இருந்த சி.மகேஸ்வரிஐபிஎஸ், திருநெல்வேலி நகர காவல் ஆணையராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு காவல்துறை அகாடமி கூடுதல் இயக்குனராக பொறுப்பில் இருந்த கே.ஜோஷி நிர்மல் குமார்.ஐபிஎஸ், சிவில் சப்ளை சிஐடி ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • டிஐஜியாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த திஷா மிட்டல்.ஐபிஎஸ், தற்போது சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை வடக்கு போக்குவரத்து டிஐஜியாக இருந்த அபிஷேக் தீக்ஷித், சென்னை வடக்கு மண்டலம் சட்டம் ஒழுங்கு டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை வடக்கு மண்டலம் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த பி.சாமுண்டீஸ்வரி.ஐபிஎஸ், சென்னை காவல்துறை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருவாரூர் மாவட்ட எஸ்பி பி.சுரேஷ்குமார்.ஐபிஎஸ், தென்காசி மாவட்டம் எஸ்பி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தென்காசி மாவட்ட எஸ்பியாக இருந்த இ.டி.சாம்சன்.ஐபிஎஸ், சென்னை சிஐடி எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை சிபிசிஐடி எஸ்பியாக இருந்த எஸ்.ஜெயக்குமார்.ஐபிஎஸ், தற்போது திருவாரூர் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த இ.சுந்தர வதனம்.ஐபிஎஸ், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக இருந்த டி.என்.ஹரிகரன பிரசாத்.ஐபிஎஸ், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு படை எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு படை எஸ்பியாக இருந்த, பி.சுந்தரவடிவேல்.ஐபிஎஸ், நீலகிரி மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த டாக்டர்.தீபா சத்யன்.ஐபிஎஸ், தற்போது சென்னை காவல்துறை தலைமையகம் எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Published by
மணிகண்டன்
Tags: #IAS#IPS

Recent Posts

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

57 minutes ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

2 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

4 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

4 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

4 hours ago