காசிமேட்டில் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 9 மீனவர்கள் மீட்பு!
காசிமேட்டில் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 9 மீனவர்கள் மீட்பு.
சென்னை காசிமேடு பகுதியில் 9 மீனவர்கள் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போகினர். இவர்களை தேடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவர்கள் 9 பேரும் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீன் வள துறை அமைச்சர் ஜெயக்குமார், மீட்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருடன் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தொலைந்த காசிமேடு மீனவர்களை தொடர்ச்சியாக தேடி வந்தோம். அவர்களது குடும்பத்தினரும் என் மீதும் அரசு மீதும் நம்பிக்கை இருப்பதாக சொல்லி வந்தார்கள். நாங்கள் பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்த் மற்றும் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் காற்றின் வேகத்தால் வந்திருக்க கூடும் என தகவல் அளித்திருந்தோம்.
இறுதியாக பர்மா மியான்மரில் உள்ள அத்தியாசி யாங்கூர் ஆகிய இடத்தில 9 பெரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் படகுடன் நலமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதுடன் புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்துக்கு அவர்களை கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், மீனவர்களின் குடும்பத்தினரும் தற்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என கூறியுள்ளார்.