குடை முக்கியம் மக்களே….9 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.!
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்யவுள்ளது. கோவையின் பல இடங்களில் இரவு முழுவதும் பரவலாக பெய்த சாரல் மழை பெய்தது.
அந்த வகையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.9 மாவட்டங்களில் கனமழை
அதன்படி, நாளை (07.01.2024) தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆவணங்களை சரிபார்க்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுமதி!
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
பிரதமர் மோடியை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு.!
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றைய தினம் லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.