9 மாவட்டங்கள்.! 1500 கோடி.! புதியதாக உருவாகும் சிபிகாட் தொழிற் பூங்காக்கள்.! – தமிழக நிதியமைச்சர் அறிவிப்பு.!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதியதாகா சிபிகாட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டபேரைவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் தமிழகத்திற்கான பல்வேறு நலதிட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதில் முக்கியமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதியதாகா சிபிகாட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாம். அதற்காக தற்போது முதற்கட்டமாக 1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்ககளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக அந்த 9 மாவட்டங்களில் சுமார் 4000 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்பட உள்ளது எனவும், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025