9 அதிமுக எம்எல்ஏக்களும் மே 29ம் தேதி பதவி ஏற்பு
9 அதிமுக எம்எல்ஏக்களும் மே 29ம் தேதி தலைமைச் செயலகத்தில் பதவியேற்க உள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக 13 இடங்களிலும்,அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்களும் மே 29ம் தேதி தலைமைச் செயலகத்தில் பதவியேற்க உள்ளனர்.சபாநாயகர் தனபால் முன்னிலையில் 9 அதிமுக எம்எல்ஏக்களும் பதவியேற்க உள்ளனர்.