கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 9.64 லட்சம் பேருக்கு சிகிச்சை…! அமைச்சர் விஜயபாஸ்கர்
தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் கடந்த 19 நாட்களாக நடைபெறுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 14,678 மருத்துவ முகாம்கள் மூலம் 9.64 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பும் வரை போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடரும்.தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் கடந்த 19 நாட்களாக நடைபெறுகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.