2031-க்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
சென்னையில் CREDAI அமைப்பின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் வீடு,மனை பத்திரப்பதிவு மூலம் ரூ.5973 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் சமூகம் வளர்ந்து இருக்கிறது என்பதை கீழடி அகழாய்வு மூலம் அறியமுடிகிறது. மாநில பொருளாதார வளர்ச்சி சிறப்பாக முன்னேறி வருவதை குறியீடுகள் காட்டுகின்றன.
கடந்த காலாண்டில் தொழிற்சாலைகள் சேமிப்பு கிடங்குகள் 4.4 மில்லியன் சதுரஅடி பரப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு வளர்ச்சி அதிகரித்துள்ளது. கட்டுமானத்துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. மனைப்பிரிவு, மனைகளுக்கு 60 நாளில் அனுமதி அளிப்பதற்கான ஒற்றைச்சாரள முறை அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக அறிவித்து திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் , குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். 2026 முதல் 2046-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் வளர்ச்சிக்கான பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். வரைபட அனுமதியின் செல்லத்தக்க காலம் 5 ஆண்டில் இருந்து 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும். 2031-க்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…