தமிழகத்தில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிணி முறையில் கல்வி வழங்க ஏற்பாடு….!
ஸ்ரீரங்கம்:இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கொண்டு வர இருக்கிறோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிணி முறையில் கல்வி வழங்க 486 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.