9 மதகு உடைஞ்ச..! பிறகும் மணல் கொள்ளை ஓயவில்லை..! வைகோ குற்றச்சாட்டு..!!
முக்கொம்பு அணையில் 9மதகுகள் உடைந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கூடுதலாகம் வீணாகவும் வெளியேறியது.இந்த 9 அணைகளும் மணம் கொள்ளையால் தான் உடைந்தது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டிய நிலையில் அதனை மறுத்த தமிழக முதல்வர் பழனிச்சாமி நேற்று 9 அணைகளையும் பார்வையிட்டார்.
இதனிடையே இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கொம்பு அணையில் 9மதகுகள் அடுத்தடுத்த நாளில் உடைப்பிற்கு காரணம் மணல் கொள்ளையே, அணை உடைந்த பின்பும் மணல் அள்ளப்படுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
மேலும் கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கூறினார்.
DINASUVADU