திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 8-வது முறையாக தடை.!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ம ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனவே,பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கட்டுபாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த 7 முறையாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். தற்போது, மீண்டும் 8வது முறையாக திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்