தமிழகத்தில் நாளை 8 -வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கும் விதமாக நாடு முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 7 வாரங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 5 வாரம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முகாம் கடந்த இரண்டு வாரங்கள் மது பிரியர்கள் மற்றும் அசைவ விரும்பிகளுக்காக சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் மூலமாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் எனவும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு அதிகம் கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து 8 வாரமாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தாலும் இன்னும் தடுப்பூசி போடவேண்டிய நபர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…