89 கல்லூரிகள் தரமற்றது என பரவிய தகவல் தவறானது- அண்ணா பல்கலைக்கழகம்!

Default Image

89 கல்லூரிகள் தரமற்றது என சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம், இணைய வாயிலாக ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங்கியது.

அந்தவகையில், தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 89 தரமற்ற கல்லூரிகள் இயங்குவதாகவும், அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 89 கல்லூரிகள் தரமற்றது என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரிகள் தரமானது, தரமற்றது என இணைவு கல்லூரிகளை பாகுபாடு செய்யவில்லை எனவும், 89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்