88,398 கிளைகள் ,16 ,88,388 பேர் தேர்வு -தொடங்கியது திமுக உட்கட்சித் தேர்தல்
15வது கிளை பொதுத்தேர்தலை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காஞ்சிபுரத்தில் தொடக்கி வைத்தார்.
1949-ஆம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்பு முதல் தலைமை கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக ,இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து வருகிறது திமுக. சட்டத்திட்டங்களின் படி ,பல கட்டங்களாக திமுக அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெறுகிறது . கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று திமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது.முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும்.இதற்கு பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுகவின் 15வது கிளை பொதுத்தேர்தலை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காஞ்சிபுரத்தில் தொடக்கி வைத்தார்.இதன் பின்னர் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 398 கிளைகளுக்கு இன்று முதல் தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தல் மூலமாக 16 லட்சத்து 88 ஆயிரத்து 388 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.